திருப்பூர் வடக்கு குறு மைய மாணவர் வாலிபால் போட்டி | sports | Kovai
திருப்பூர் வடக்கு குறு மைய மாணவர் பிரிவு வாலிபால் போட்டி சிறுபூலுவபட்டி ஜெய்சாரதா பள்ளியில் நடந்தது. போட்டிகளை பள்ளி முதல்வர் மலர் துவக்கி வைத்தார். அதில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 19 அணிகள், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 18 அணிகள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 13 அணிகள் பங்கேற்றனர். அதில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி அணியும் - திருக்குமரன் மெட்ரிக் பள்ளி அணியும் மோதியது. அதில் திருக்குமரன் மெட்ரிக் பள்ளி 2:0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. ஜெய்சாரதா மற்றும் பாரதி கிட்ஸ் மெட்ரிக் பள்ளி அணிகள் விளையாடிய போட்டியில் ஜெய்சாரதா 2:0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. ஏ.வி.பி மற்றும் வித்யா மந்திர் விளையாடிய போட்டியில் ஏ. வி. பி. பள்ளி வெற்றி பெற்றது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.