சிறப்பாக ஆடிய வீராங்கனைகள் | Sports| Tripur
திருப்பூர் வடக்கு குறு மைய பெண்கள் வாலிபால் போட்டி சிறுபூலுவபட்டி ஜெய்சாரதா பள்ளியில் நடந்தது. அதில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 14 அணிகள், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 14 அணிகள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 8 அணிகள் பங்கேற்றன. 19 வயதுக்கு உட்பட்டோர் முதல் போட்டியில் ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி அணியும், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி அணியும் மோதியது. முதல் செட்டை ஜெய்சாரதா பள்ளி அணி வென்றது. இரண்டாவது செட்டை ஜெய்வாபாய் பள்ளி அணி பெற்றது. இதனால் வெற்றி பெற டிசைடிங் செட் நடத்தப்பட்டது. அதில் ஜெய்வாபாய் பள்ளி 16:14 என்ற புள்ளிகள் பெற்று 2:1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இன்ஃபென்ட் ஜீசஸ் பள்ளி அணியும், பிச்சம்பாளையம் மாநகராட்சி பள்ளி அணியும் மோதியது. அதில் இன்ஃபென்ட் ஜீசஸ் பள்ளி அணி வெற்றி பெற்றது. அடுத்ததாக வாவிபாளையம் மாநகராட்சி பள்ளி மற்றும் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி அணிகள் மோதியது. அதில் வாவிபாளையம் மாநகராட்சி பள்ளி அணி வெற்றி பெற்றது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.