வீரர், வீராங்கனைகள் அபார ஆட்டம் | sports | covai
திருப்பூர் வடக்கு குறுமைய மாணவ, மாணவியர் தடகள போட்டி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. பள்ளி, வட்டார அளவில் சிறந்த விளையாாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் நடக்கிறது. குழு போட்டிகள் முடிந்த நிலையில் தடகள போட்டிகள் துவங்கியது. 19 வயது மாணவர் பிரிவு உயரம் தாண்டுதலில் ஜெய் சாரதா பள்ளி புனிதன் முதலிடம் பெற்றார். ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி ஆதித்யா இரண்டாமிடம், அனுப்பர்பாளையம் அரசு பள்ளி மதன் மூன்றாமிடம் பெற்றனர். பதிநான்கு வயது மாணவியர் பிரிவு குண்டெறிதல் ஜெய்வாபாய் பள்ளி தேஜாஸ்ரீ முதலிடம் பெற்றார். ஜெய்வாபாய் பள்ளி ஸ்ரீநிதி இரண்டாமிடம், கொங்கு வேளாளர் பள்ளி கோபிகா மூன்றாமிடம் பெற்றனர்.
செப் 06, 2024