630 பேர் பங்கேற்ற மெகா போட்டி | State Level Sub Junior Badminton ChampionShip | Tirupur
630 பேர் பங்கேற்ற மெகா போட்டி / State Level Sub Junior Badminton ChampionShip / Tirupur தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 13 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 போட்டி, திருப்பூர் மோகன்ஸ் பாட்மிண்டன் அகாடமியில் நடக்கிறது. இப்போட்டகள் வரும் 28 ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட அணி, கிளப் வீரர்கள் மற்றும் தனி நபர்கள் என 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டிகள் இன்று நடைபெற்றது. அரையிறுதிப் போட்டி வரும் 27 ம் தேதியும், இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா வரும் 28 ம் தேதியும் நடக்கிறது.