உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / 3 பிரிவுகளில் விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகள்|Taekwondo| District Tournament| sports |Tiruppur

3 பிரிவுகளில் விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகள்|Taekwondo| District Tournament| sports |Tiruppur

3 பிரிவுகளில் விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகள்|Taekwondo| District Tournament| sports |Tiruppur திருப்பூர் காலேஜ் ரோடு, எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஆண்கள் டேக்வாண்டோ போட்டி நடந்தது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகுகுமார், மாவட்ட உடற்கல்வி அலுவலர் மகேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாருதி உடற்கல்வி கல்லூரி முதல்வர் ஜெயபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 14 வயத்திற்குட்பட்ட பிரிவில் 140 பேர், 17 வயத்திற்குட்பட்ட பிரிவில் 140 பேர் மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் 50 பேர் என மொத்தம் 330 பேர் களத்தில் உள்ளனர். ராஜேந்திரன் மற்றும் பாலசுப்பரமணியம் ஆகியோர் கண்காணிப்பு குழு அலுவலர்களாக செயல்படுகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது.

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ