ஒரு லட்சத்து 8 ஆயிரம் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணி விறுவிறு | Temple Festival | Thirupur
திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி நாளில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏதுவாக ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் துவங்கியது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25க்கும் அதிகமான சமையல் கலைஞர்கள், கடலை மாவில் பூந்தி தயாரித்தனர். சர்க்கரை பாகு தயாரித்து பூந்தியை நனையவிட்டனர். நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய், நெய் ஆகியவை கலந்து லட்டு உருட்டும் பணி விறுவிறுப்பாக நடந்தது. இதில் 200க்கும் அதிகமான சேவார்த்திகள், தலையுறை, கையுறை அணிந்து லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். லட்டு தயாரிக்க மூன்று டன் சர்க்கரை, இரண்டு டன் கடலை மாவு, தலா 16 கிலோ எடையுள்ள 150 டின் ரீபைண்ட் ஆயில் மற்றும் 25 டின் நெய், அதிக அளவு முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்பட்டது.