ஒற்றையர் பிரிவில் 9 அணிகள் பங்கேற்பு | tennikoit competition | tiruppur
ஒற்றையர் பிரிவில் 9 அணிகள் பங்கேற்பு / tennikoit competition / tiruppur திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடர்ச்சியாக நடக்கிறது. இன்று அனைத்து பிரிவுகளுக்கான டென்னிகாய்ட் போட்டி ராக்கியாபளையம் வித்ய விகாஷினி மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளை வித்ய விகாஷினி பள்ளித் தாளாளர் தர்மலிங்கம் துவக்கி வைத்தார். 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் ஒற்றையர் பிரிவில் 9 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் பிரண்ட் லைன் பள்ளி அணி கருப்பக் கவுண்டம்பாளையம் அரசு பள்ளி அணியை 2.0 என்ற செட் கணக்கில் வென்றது. இரட்டையர் பிரிவில் 10 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கருப்பக் கவுண்டம்பாளையம் அணி பிரண்ட் லைன் பள்ளி அணியை 2.0 என்ற செட் கணக்கில் வென்றது. 17 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் 9 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் வித்ய விகாஷினி மெட்ரிக் பள்ளி அணி 2.0 என்ற செட் கணக்கில் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. இரட்டையர் பிரிவில் 10 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் வித்ய விகாஷினி மெட்ரிக் பள்ளி அணி 2.0 என்ற செட் கணக்கில் பிரண்ட் லைன் பள்ளி அணியை வென்றது. 19 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் 12 அணிகளும், இரட்டையர் பிரிவில்13 அணிகளும் பங்கேற்றன. இந்த இரண்டு பிரிவுகளின் இறுதிப் போட்டியில் வித்ய விகாஷினி மெட்ரிக் பள்ளி அணி 2.0 என்ற செட் கணக்கில் பிரண்ட் லைன் பள்ளி அணியை வென்றது. குறுமைய இணைச் செயலாளர் தமிழ்வாணி, கண்காணிப்புக்குழு உறுப்பினர் முருகன் மேற்பார்வையில் போட்டியின் நடுவர்களாக ஜெயகண்ணன், ஜம்பு, கார்த்திக், செந்தில் மற்றும் மவுளிதரன் செயல்பட்டனர்.