உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி ஏற்பாடு | Sports | Covai

திருப்பூர் ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி ஏற்பாடு | Sports | Covai

திருப்பூர் வடக்கு குறுமைய போட்டிகளை ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி பொறுப்பேற்று நடத்துகிறது. இதில் வடக்கு குறுமைய அளவிலான போட்டிகள் திருப்பூர் டென்னிஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளை கிளப் விளையாட்டு செயலாளர் சந்துரு துவக்கி வைத்தார். வடக்கு குறுமைய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன் மேற்பார்வையில் போட்டிகள் நடக்கிறது. ஒற்றையர் இறுதிப் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் வி.கே.ஜி. அரசு பள்ளி அணி 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி அணி அணியை வென்றது. 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இன்பேட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி அணி 2-0 என்ற செட் கணக்கில் வி.கே.ஜி. அரசு பள்ளி அணியை வென்றது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வி.கே.ஜி. அரசு பள்ளி அணி 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஸ்ரீசாய் மெட்ரிக் அணி மட்டுமே பங்கேற்றதால் போட்டியின்றி வெற்றி பெற்றது. 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இன்பேட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி அணி 2-0 என்ற செட் கணக்கில் வி.கே.ஜி. அரசு பள்ளி அணியை வென்றது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வி.கே.ஜி. அரசு பள்ளி அணி 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீசாய் மெட்ரிக் அணியை வென்றது. மாணவியர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி அணி 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி அணி அணியை வென்றது. 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஜெய்வா பாய் மாநகராட்சிப் பெண்கள் பள்ளி அணி 2-0 என்ற செட் கணக்கில் இன்பேட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஜெய்வா பாய் மாநகராட்சிப் பெண்கள் பள்ளி அணி 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. தொடர்ந்து இரட்டையர் பிரிவு மாணவியர் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. பொறுப்பாளராக உடற்கல்வி ஆசிரியர்கள் நதியா, ஜெயகண்ணன், லாவண்யா இருந்தனர். ஏற்பாடுகளை உடற் கல்வி ஆசிரியர் இளவரசன் செய்திருந்தார்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை