உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / தொகுப்பு அணைகளிலிருந்து நீர் கொண்டு வர முடியுமா

தொகுப்பு அணைகளிலிருந்து நீர் கொண்டு வர முடியுமா

தொகுப்பு அணைகளிலிருந்து நீர் கொண்டு வர முடியுமா | Udumalai | Water level in Thirumoorthy Dam declines; plan to delay the 4th round of water release திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 35.56 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,008.42 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு, 750 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 300 கனஅடி நீரும், குடிநீர், 21, இழப்பு, 6 என, 327 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாசன நிலங்கள் 4மண்டலங்களாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில், பிஏபி முதல் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 521 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த, ஜனவரி 24ல் தண்ணீர் திறக்கப்பட்டது. வரும், ஜூன் 8 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு, 5 சுற்றுக்களில், 10 ஆயிரத்து, 250 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் சுற்றுக்கு நீர் வழங்கப்பட்டு, இடைவெளியின்றி 2ம் சுற்றுக்கும் நீர் வழங்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் அணைகளில் நீர்மட்டம் சரிவால், திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக நீர்வரத்து குறைந்தது உள்ளிட்ட காரணங்களினால், 3ம் சுற்று ஒரு வாரம் வரை இடைவெளி விட்டு, கடந்த ஏப்ரல் 9 முதல் நீர் திறக்கப்பட்டது. தற்போது, திருப்பூர், பல்லடம், காங்கயம் பகுதிகளுக்கு மட்டும் நீர் வழங்கப்படும் நிலையில், ஒரு வாரத்தில் 3ம் சுற்று நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிந்துள்ளதால், 4ம் சுற்றுக்கு இடைவெளி விடவும், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து நீர் கொண்டு வந்து, திருமூர்த்தி அணையில் நீர் சேகரித்த பின், 4ம் சுற்றுக்கு நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மே 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை