இளம் வீரர், வீராங்கனைகள் அபார ஆட்டம் | sports meet | covai
இளம் வீரர், வீராங்கனைகள் அபார ஆட்டம் / sports meet / covai திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடக்கிறது. இன்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், மும்முறை நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டி ஓடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் நடந்தது. 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் குண்டு எறிதல் கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி மாணவி தனுஸ்ரீ முதலிடம் பெற்றார். வித்ய விகாசினி பள்ளி மாணவி தனுஷ்கா இரண்டாமிடம் பெற்றார். அதே பள்ளி மாணவி ஹர்ஷினி மூன்றாம் இடம் வென்றார். 17 வயதுக்கு உட்பட்ட 400 மீட்டர் ஓட்டத்தில் பிளாட்டோஸ் அகாடமி மாணவி பிரேமா முதலிடம் மற்றும் சிவரஞ்சனி இரண்டாமிடம் பெற்றனர். பிரண்ட்லைன் அகாடமி தனுஷ்கா மூன்றாமிடம் பெற்றார். 19 வயதுக்கு உட்பட்டோர் வட்டு எறிதலில் பாரதி விகாஷ் மாணவி மித்ராஸ்ரீ முதலிடம் வென்றார். லிட்டில் பிளவர் மாணவி அனுஸ்ரீ இரண்டாமிடம் மற்றும் வேலவன் பள்ளி மாணவி தன்யாஸ்ரீ மூன்றாமிடம் பெற்றார். வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் செளந்தரராஜன், ராமகிருஷ்ணன், சுதாகர், பாக்கியராஜ், ஷ்யாம், வனிதா, சசிகலா, ராமாத்தாள், ஜெயந்தி, ராஜேஸ்வரி செயல்பட்டனர். போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.