உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் வடமாநில இளைஞருக்கு சரமாரி அடி! | Tirupur

திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் வடமாநில இளைஞருக்கு சரமாரி அடி! | Tirupur

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள செல்போன் கடையில் திருப்பூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் செல்போன் வாங்க சென்றார். கடை அருகே நின்ற வடமாநில இளைஞர் புதிய ஓப்போ செல்போனை அவசர தேவைக்கு விற்பதாக கூறி பேரம் பேசி 8500 ரூபாய்க்கு விற்றார். அதற்கான பில்லையும் ஹரிகிருஷ்ணனிடம் கொடுத்தார். வீட்டுக்கு சென்று பாக்சை பிரித்து பார்த்த போது உள்ளே சைனா போன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் கடைக்கு சென்று வடமாநில இளைஞரிடம் விசாரித்தார். அவர் தப்பி ஓட முயன்றார். அங்கிருந்த மக்கள் இளைஞரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜன 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை