கவட்டையில் கல் வைத்து கண்ணாடி மீது வீசி கைவரிசை |Tripur crime
திருப்பூரை அடுத்த அவிநாசி ராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். எல்.ஐ.சி. ஏஜென்ட். அவிநாசி வீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு காரில் சென்றார். காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்து திரும்பினார். அப்போது காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காரில் வைத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிந்தது.
ஜன 14, 2024