32 பவுன், கார் பறிமுதல் |Udumalpet crime
திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம், காங்கயம் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை உடுமலையில் 6, தாராபுரத்தில் 4, காங்கயத்தில் 6 என 16 வீடுகளின் கதவுகளை உடைத்து 45 சவரன், 2 பைக் மற்றும் பட்டு சேலை, குத்து விளக்குகள் கொள்ளை போனது. கொள்ளையர்களை கைது செய்ய ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி.சரவணசுந்தர், திருப்பூர் எஸ்.பி.அபிேஷக் குப்தா ஆகியோர் மேற்பார்வையில் உடுமலை, காங்கயம் டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
செப் 21, 2024