உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / விறுவிறுப்பான ஆட்டம் | volleyball tournament | Thirupur

விறுவிறுப்பான ஆட்டம் | volleyball tournament | Thirupur

விறுவிறுப்பான ஆட்டம் / volleyball tournament / Thirupur திருப்பூர், வடக்கு குறுமைய மாணவர்கள் வாலிபால் போட்டி நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. போட்டியை திருமுருகன் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் சுதாமோகன் துவக்கி வைத்தார். 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் , திருமுருகன் மெட்ரிக் பள்ளி அணி முதலிடம் பெற்றது. விகாஸ் ஜூனியர் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 17 வயதுக்குட்பட்ட பிரிவில் திருமுருகன் மெட்ரிக் பள்ளி முதலிடமும், கொங்கு மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும், 19 வயது பிரிவில் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி முதலிடமும், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றது. நடுவர்களாக ஜெரால்ட், ராஜா ஆகியோர் செயல்பட்டனர்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி