உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / டாலர் சிட்டியில் தினமும் அவலம் தான் | Waste Water | Tripur

டாலர் சிட்டியில் தினமும் அவலம் தான் | Waste Water | Tripur

டாலர் சிட்டி என அழைக்கப்படும் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் வீட்டுக்கு தேவையான தண்ணீர் சீரான இடைவெளியில் முறையாக விநியோகம் செய்வதில்லை. திருப்பூர் பி.என். ரோடு, மேட்டுப்பாளையம் முதல் மில்லர் ஸ்டாப் வரை 100 மீட்டர் துாரத்துக்குள் மூன்று இடங்களில் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து 24 மணி நேரமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி கால்வாயில் கலக்கிறது. அப்பகுதி முழுவதும் தெப்பம் போல் குடிநீர் தேங்கி நிற்கிறது. குழாய் உடைப்புக்களை சரி செய்து வீணாகும் குடிநீரை குடியிருப்பு வாசிகளுக்கு முறையாக வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மே 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ