உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / 4 பேர் கும்பல் வெறிச்செயல் | Intimidation of the Girl | Youth murder

4 பேர் கும்பல் வெறிச்செயல் | Intimidation of the Girl | Youth murder

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் அன்பு வயது 23. திருப்பூர் அருகே கணக்கம்பாளையத்தில் தங்கி வட்டி பிசினஸ் செய்து வந்தார். இவர், திருப்பூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் பழகி அடிக்கடி மொபைல் போனில் வீடியோ கால் பேசி வந்தார். சிறுமிக்கு தெரியாமல் அவரை ஆபாசமாக சில வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்தார். அன்புவுடன் சிறுமி பழகி வருவது பெற்றோருக்கு தெரிந்தது. சிறுமியை பெற்றோர் கண்டித்தனர். இதனால் அன்புவிடம் பேசுவதை சிறுமி தவிர்த்தார். அதேநேரம் அன்புவின் நண்பர் தமிழரசனும், சிறுமியும் காதலித்தனர். சிறுமியை காதலிப்பது குறித்து அன்புவிடம் தமிழரசன் கூறினர். உனக்கு முன்பே சிறுமி தன்னை காதலித்ததாக அன்பு கூறினார். அதற்கு ஆதரமாக சிறுமியின் ஆபாச போட்டோ மற்றும் வீடியோவை தமிழரசனிடம் காட்டினார். வீடியோ, போட்டோவை தனக்கு அனுப்பும்படி அன்புவிடம் தமிழரசன் கேட்டார். இதையடுத்து அவற்றை அன்பு அனுப்பினார். அதை சிறுமியின் தந்தையிடம் தமிழரசன் கொடுத்து வீடியோவை வெளியிடாமல் இருக்க தனதுக்கு 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டி வாங்கினார் இதுகுறித்து அன்புக்கு தெரியவந்ததில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இவ்வளவு பிரச்னைக்கும் அன்பு தான் காரணம் என எண்ணிய சிறுமியின் தந்தை அன்புவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த அன்புவுக்கு பழக்கமான செல்லத்துரையை அணுகினார். நேற்று இரவு காந்தி நகர் ஏ.வி.பி., லே அவுட் பகுதிக்கு வரும்படி அன்புவை செல்லதுரை அழைத்தார். இதை நம்பிய அன்பு தனது தம்பி மகேஸ்வரனை அழைத்துக் கொண்டு காரில் சென்றார். அங்கு முன்கூட்டியே காத்திருந்த செல்லதுரையின் கூட்டாளிகள் சூர்யா, தேவா, பிரசன்னா, தமிழரசன் ஆகியோர் அன்புவை தாக்க ஓடி வந்தனர். அவர்களிடம் இருந்து அன்பு, மகேஸ்வரன் தப்பி ஓடினர். பயங்கர ஆயுதங்களுடன் விரட்டிய கும்பல் அன்புவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியது. கொலைவெறி கும்பலிடம் இருந்து தப்பிய மகேஸ்வரன் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கூறினார். ஸ்பாட்டிற்கு சென்ற போலீசார் அன்பு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இவ்வழக்கில் தமிழரசனை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் தந்தையிடம் விசாரணை நடக்கிறது. தப்பியோடிய செல்லத்துரை, அவரது கூட்டாளிகளை போலீசார் தேடுகின்றனர். செல்லத்துரை, கூட்டாளிகள் சிலர் மீது கஞ்சா, அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசார் கூறினர்.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ