உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவண்ணாமலை / மாஜி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ₹200 கோடி சொத்து குவிப்பு?

மாஜி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ₹200 கோடி சொத்து குவிப்பு?

மாஜி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ₹200 கோடி சொத்து குவிப்பு? / Anti corruption police raid former minister and admk mla homes / Arani, Madurai திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார். சேவூர் ராமச்சந்திரன் அமைச்சராக பதவி வகித்த போது 200 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகவும், தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்ததாகவும் புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து ஆரணியில் உள்ள சேவூர் ராமச்சந்திரன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மற்றும் வேலூர் சரக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 20-க்கு மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆரணியில் உள்ள சேவூர் ராமச்சந்திரனின் மகன்கள் விஜயகுமார் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். breath: உசிலம்பட்டி அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டிலும் ரெய்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எம்எல்ஏவாக கடந்த 2016 முதல் 2021 காலகட்டத்தில் இருந்தவர் நீதிபதி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதி, அவரது மனைவி ஆனந்தி, மகன் இளஞ்செழியன் மூவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை உசிலம்பட்டியில் உள்ள நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரெய்டின் போது லஞ்சம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதா என்பது குறித்து கருத்துக்கூற போலீசார் மறுத்து விட்டனர்.

மே 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை