7 பேர் வலுக்கட்டாயமாக ஆஸ்பிட்டலில் அட்மிட் |Condemning the Minister Farmers on hunger strike
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மேல்மா சிப்காட் விவகாரத்தில் விவசாயிகளை விவசாயிகளே இல்லை என்று சட்டசபையில் பொய் கூறிய அமைச்சர் எ.வ.வேலு பதவி விலக வேண்டும். மேல்மா சிப்காட் திட்டத்தை திரும்பப் பெற முதல்வரை சந்திக்க சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்தனர். இதனை கண்டித்து விவசாயிகள் 20ம் தேதி முதல் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை உண்ணாவிரத பந்தலில் தூங்கிக் கொண்டிருந்த தேவன், மாசிலாமணி, ராஜா, உள்ளிட்ட 7 விவசாயிகளுக்கு, முதல் உதவி அளிப்பதாக கூறி போலீசார் கட்டாயமாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். தங்களின் உண்ணாவிரதத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில், உண்ணாவிரத பந்தலில் அருகே வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதி மருத்துவமனைகள் இருந்தும் அங்கு அழைத்துச் செல்லாமல் 80 கி.மீ தூரமுள்ள திருவண்ணாமலைக்கு, போலீசார் தங்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததுள்ளதாகவும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டினர்.