கண்டித்து யாக சாலையில் குருக்கள் தர்ணா | Sivachariyar protest | Tiruvannamalai
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். விஐபிகள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்படுவது வழக்கம் நன்கொடையாளர் சிலரை குருக்கள் இளவரசு பட்டம் ரமேஷ் சிறப்பு தரிசன லைனில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது இதைப் பார்த்த கோயில் இணை கமிஷனர் ஜோதி, நீ என்ன புரோக்கரா என குருக்களை ஒருமையில் கேட்டார் அதற்கு குருக்கள் கோயில் நன்கொடையாளர்களை தான் அழைத்துச் சென்றேன் பணம் வாங்கி யாரையும் அழைத்துச் செல்லவில்லை என கூறியுள்ளார் என்னிடம் அனுமதி பெற்று தான் நீ அழைத்துச் செல்ல வேண்டும் என அனைத்து பக்தர்கள் முன்னிலையிலும் இணை கமிஷனர் கறாராக பேசினார் தொடர்ந்து இணை கமிஷனரை கண்டித்து கோயில் பூஜையில் ஈடுபட்டிருந்த குருக்கள் யாகசாலையில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர் நாங்கள் கோயில் நிர்வாகத்தில் எந்த விதத்திலும் இடையூறு செய்யவில்லை 2017 ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு சிவாச்சாரியார்கள் சார்பில் பக்தர்களிடமிருந்து 7 கோடி ரூபாய் வசூலித்து அறநிலையத்துறைக்கு நன்கொடை வழங்கினோம் அறநிலையத்துறை உயரதிகாரிகள் குறுக்கு வழியில் தரிசனம் செய்ய அனுமதிக்கிறீர்கள் ஆனால் நன்கொடையாளர்களை சிறப்பு தரிசன லைனில் அழைத்துச் செல்வதில் என்ன தவறு என ரமேஷ் குருக்கள் கேள்வி எழுப்பினார் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் தலைமையில், குருக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தர்ணாவை கைவிட்டனர்