மார்ச் 30ம் தேதி தேர் திருவிழா | Jambukeswarar temple panguni festival kodiyetram | Trichy
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம். ஆண்டுதோறும் மண்டல பிரம்மோற்சவம் என்ற பெயரில் பங்குனி திருவிழா 48 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். இன்று காலை கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா துவங்கியது. வேத மந்திரம் முழங்க ரிஷப வாகனம் பொறிக்கப்பட்ட கொடிப்பட்டயம் தங்கக்கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 30ம் தேதி நடைபெறும். ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்தனர். கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.