பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு Trichy Malai Kaliamman Temple
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் சொக்கலிங்கபுரம் ஸ்ரீ மலைக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 17 ம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது, தொடர்ந்து முளைப்பாரி எடுத்தல், காப்பு கட்டுதல் வைபவமும், அதனைத் தொடர்ந்து அய்யாளம்மன் படித்துறையில் இருந்து புனித தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
ஜன 21, 2024