உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / மணப்பாறை அரசு ஆஸ்பிடல் டாக்டர்கள் சாதனை | 5 kg tumor in the stomach | surgery and removal | GH

மணப்பாறை அரசு ஆஸ்பிடல் டாக்டர்கள் சாதனை | 5 kg tumor in the stomach | surgery and removal | GH

மணப்பாறை அரசு ஆஸ்பிடல் டாக்டர்கள் சாதனை | 5 kg tumor in the stomach | surgery and removal | GH | Manaparai புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த வடுகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலா, வயது 45. ஓராண்டாக கடுமையான வயிற்று வலியால் தவித்து வந்தார். பல இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை எடுத்தும் பயனில்லை. அவரது மகன் விஜய் திருச்சி மணப்பாறை காமராஜர் அரசு தலைமை மருத்துவமனையில் அட்மிட் செய்தார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கையில் பெரிய சைஸ் கட்டி வயிற்றில் இருப்பது உறுதியானது. அவருக்கு ஆப்ரேஷன் செய்து கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து தலைமை டாக்டர் தமிழ்மணி மேற்பார்வையில் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் மஜிதா, டாக்டர் விஜயா, மயக்கவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் மலைத்துரை, நர்சுகள் அம்சவள்ளி, ராஜலெட்சுமி, ஜோன் ஆப்ஆர்க் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழு கலாவிற்கு 3 மணி நேரம் ஆப்ரேஷன் செய்து 5 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ