முஸ்லிம் பக்தரின் அன்பு காணிக்கை | ₹52 Lakhs for Srirangam Ranganatha Perumal's Diamond Crown
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் சுவாமிக்கு முஸ்லிம் பக்தர் உட்பட நன்கொடையாளர்கள் பலர் சேர்ந்து ஒரே ரத்தின கல்லில் 160க்கும் மேற்பட்ட வைரங்கள் பதித்து அழகிய, நுணுக்கமான வேலைபாடுகள் கொண்ட தத்ரூபமான வைர கிரீடத்தை தயார் செய்து நன்கொடையாக கோயில் நிர்வாத்திடம் வழங்கினர். இந்த அழகிய நுட்பமான வேலைபாடுகள் கொண்ட வைர கீரடத்தை திருச்சி மலைக்கோட்டையில் உள்ள பிரபல மற்றும் பாரம்பரியம் மிக்க கோபால்தாஸ் ஜுவல்லர்ஸ் ஏற்றுமதி நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது. இதற்காக 34 கேரட்டில் 619 வைரங்கள் மற்றும் கொலம்பியாவில் இருந்து வரவழைத்த 140 கலர் ஸ்டோன்களில் கடைசல் வேலை செய்து, எமரால்டு இன்கிரீமிங் செய்து, 40 நாட்களில் பக்தியுடன் ஆத்மார்தமாக பணியில் ஈடுபட்டு தயார் செய்து ரங்கநாதப் பெருமாளுக்கு கொடுத்ததை தங்களின் பாக்கியமாக கருதுவதாக கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் டில்ஜித் சி ஷாஹ பெருமிதத்துடன் கூறி கண் கலங்கினார். ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு கிரீடம் செய்ய ஆர்டர் கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம். இதற்காக கோயிலுக்கு சென்று அளவீடுகள் செய்தோம். வித்தியாசமான முறையில் கிரீடம் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஒரே ரத்தினக் கல்லால் 52 லட்சம் ரூபாய் மதிப்பில் கிரீடம் உருவாக்கப்பட்டது. இதை பெருமாளுக்கு செய்த சிறு தொண்டாக கருதுகிறோம் என கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ஒர்க்கிங் மேனேஜர் ரவீந்திரன் பெருமிதம் கொண்டார். ஆறு தொழிலாளர்களின் கடினமான முயற்சியில் வைர கீரிடம் தயாரிக்கப்பட்டது என்று சொல்வதை விட தொழிலாளர்கள் பக்தியுடன் உள்ளப்பூர்வமாக தெய்வ கடாச்சத்தின் பால் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதால் தான் வைர கீரிடத்தை பெருமாள் ஏற்று கொண்டதாக பக்தர்கள் நம்பிக்கை