/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தேரை வடம் பிடித்த பக்தர்கள் | Aadi pura festival at thayyumana swamy temple
தேரை வடம் பிடித்த பக்தர்கள் | Aadi pura festival at thayyumana swamy temple
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆடிப்பூர பெருவிழா கடந்த ஜூலை 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி வீதி உலா வைபவம் நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவாக நேற்று இரவு ஆடிப்பூர தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மட்டுவர் தேரோடும் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் அடைந்தனர். சிவனடியார்கள் மற்றும் ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி அம்பாளை வழிபட்டனர்.
ஆக 07, 2024