உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / நாக்கை துருத்தி இளைஞர்களை அடிக்கப்பாய்ந்த எம்எல்ஏ உதவியாளர்|Opposition to MNMK Candidate Abdul Samad

நாக்கை துருத்தி இளைஞர்களை அடிக்கப்பாய்ந்த எம்எல்ஏ உதவியாளர்|Opposition to MNMK Candidate Abdul Samad

நாக்கை துருத்தி இளைஞர்களை அடிக்கப்பாய்ந்த எம்எல்ஏ உதவியாளர் | Opposition to MNMK Candidate Abdul Samad | Manaparai Constituency | INDI Alliance | Tamilnadu Politics திமுக கூட்டணியில் திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டசபை தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது எம்எல்ஏ இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். இன்று அவர் மணப்பாறை ஒன்றியம் புத்தாநத்தம் அடுத்த வெள்ளையக் கவுண்டம்பட்டிக்கு பிரச்சாரம் செய்ய வருவதாக இருந்தது. இதையறிந்த கிராம மக்கள் சாலையில் அப்துல் சமது ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன அப்துல் சமது 5 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. புத்தாநத்தம் ஊராட்சி இரண்டாக பிரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் பலமுறை போராட்டம் நடத்திய போதும் கண்டுகொள்ளவில்லை. ஐந்து ஆண்டுகளாக வராத எம்எல்ஏ அப்துல் சமது ஓட்டுக்கேட்டு வரக்கூடாது. வந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தி விரட்டியடிப்போம் என மக்கள் கொதிப்படைந்தனர். அவர்களிடம் புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்ததை வாபஸ் பெறவில்லை. சம்பவ இடத்திற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அங்கு கார்கள் புடைசூழ வந்த எம்எல்ஏ உதவியாளர் ஒருவர் கிராம மக்களிடம் தகராறு செய்து நாக்கைத் துருத்தி அடிக்கப்பாய்ந்தார். இருதரப்பினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானதால் போலீசார் இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரச்சினை நீடித்தது. பின்னர் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்துல் சமது ஊருக்குள் செல்ல அனுமதித்தனர். ரோட்டில் தடுப்புகள் வைத்து எம்எல்ஏவிற்கு கடும் எதிர்ப்பு மணப்பாறை அடுத்துள்ள மெய்யம்பட்டி கிராமத்திலும் வேட்பாளர் அப்துல் சமதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு வேட்பாளர் செல்லாமல் அடுத்த பகுதிக்கு சென்று வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஏப் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை