நிலுவைத் தொகை வழங்க 30,000 லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி
நிலுவைத் தொகை வழங்க 30,000 லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி | Trichy | ₹30,000 Bribe | Releasing Pending Payment | Vigilance and Anti-Corruption Police Action திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் இளநிலை பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் தேவி. இவர் 2020ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை கேட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நிலுவைத் தொகை 6 லட்சம் ரூபாயை விடுவிக்க மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத தேவியின் கணவர் இளமுருகு, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாயை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்த புகழேந்தியிடம் லஞ்சத்தை இளமுருகு கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் புகழேந்தியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.