உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திருச்சியை கலக்கும் அலீப் அரேபியன் ஆர்கானிக் டீ | Arabian tea | Trichy

திருச்சியை கலக்கும் அலீப் அரேபியன் ஆர்கானிக் டீ | Arabian tea | Trichy

ஜிஞ்ஜர் டீ, லெமன் டீ, ஹனீ டீ, ப்ளாக் டீ என விதவிதமான டீக்களை டீ பிரியர்கள் குடித்திருப்பார்கள். ஆனால் தமிழகத்திலேயே முதல் முறையாக திருச்சியில் ஆர்கானிக் டீ அறிமுகம் செய்துள்ளனர். அதிலும் 100 வகையான ஆர்க்கானிக் டீயை நாட்டுச்சக்கரை, கருப்பட்டி கலவையில் சுடச்சுட குறைந்த விலையில் ஒரு டம்ளர் டீ 15 ரூபாய்க்கு தருகின்றனர். திருச்சி ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள அலீப் அரேபியன் டீ ஸ்டாலில் கண்ணாடி குடுவை அடுப்பில் ஆவி பறக்க சுடுநீரில் பிளாக் டீ, லெமன் டீ, கிரீன் டீ, பைனாப்பிள் டீ, கிரேப் டீ, நன்னாரி டீ, பட்டை டீ, கிராம்பு டீ, ஏலக்காய் டீ, சுக்கு மிளகு சீரகம் மசாலா டீ, என 100 வகையான டீயை தினமும் சுவைக்கலாம். அரேபிய நாட்டில் கொலஸ்ட்ராலை கன்ட்ரோல் செய்து, மாரடைப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கறி விருந்துக்கு பிறகு பேரிச்சம் பழம்த்துடன் காவா டீ குடிப்பர். இங்கு ஸ்பெஷல் அயிட்டமாக அரேபியன் டீ ஸ்டாலிலும் காவா டீயை வெறும் 20 ரூபாய்க்கு ருசிக்கலாம் என்கிறார் அதன் உரிமையாளர் சாதிக். டீ பிரியர்கள் வசதிக்காக உள்ளே அமர்ந்து டீ குடிக்க தனித்தனி இருக்கைகள் போடப்பட்டுள்ளன. டாய்லெட் வசதியும் உண்டு. இங்கு இனிப்பு மற்றும் கார வகைகளை ருசித்துக் கொண்டே டீக்குடிக்க வசதியாக பர்மி முதல் பக்கோடா வரை அனைத்து வகை பலகாரங்கள் அடுக்கி வைத்துள்ளனர். மண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சக்கரை, பனங்கற்கண்டு, பனை வெல்லம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விற்பனை செய்கின்றனர். பால், ஜீனி இன்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கையான பொருட்களில் தயாரிக்கப்படும் டீக்கு திருச்சி டீ பிரியர்களிடையே மவுசு அதிகரித்து வருகிறது.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை