தமிழக அரசை கண்டித்து ஊர்வலம் ஆர்ப்பாட்டம் | Trichy
தொழிலாளர் நலவாரிய சங்கங்கள் மற்றும் சிஐடியு முறைசாரா சங்கங்கள் சார்பில் தமிழக அரசை கண்டித்து ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 72 லட்சம் தொழிலாளர்களின் நலவாரிய பதிவுகள் அழிந்து விட்டதற்கு விசாரணை நடத்த வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் பென்ஷன் மற்றும் போனஸ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மேஜர் சரவணன் ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை 250 க்கும் மேற்பட்ட கட்டுமான, ஆட்டோ டிரைவர்கள்மற்றும் அனைத்து முறைசாரா தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றனர். திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்
ஜன 31, 2024