கைத்துப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு உயிர் நீத்த துயரம்
கைத்துப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு உயிர் நீத்த துயரம் / Trichy / Bell General Manager suicide திருச்சி திருவெறும்பூர் கணேசபுரம் 8வது தெருவை சேர்ந்த சண்முகம் வயது 50. இவர் திருச்சி பெல் நிறுவனத்தின் எஸ்எஸ்டிபி பிரிவு பொது மேலாளர். மனைவி பார்வதி, மகள் உள்ளார். நேற்று காலை 8.30 மணிக்கு பணிக்கு சென்றவர் பணி முடிந்து மாலை வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பார்வதி நேற்று மாலை செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சண்முகம் எடுக்கவில்லை. அலுவலக ஊழியர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அலுவலக கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அறை கதவை தட்டினர். திறக்கப்படாமல் இருந்ததால் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். சண்முகம் சோபாவில் கைத்துப்பாக்கியால் தலையில் சுடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பெல் போலீசாருக்கு புகார் கூறினர். சண்முகத்திற்கு இதய நோய் பிரச்சனை இருந்து வருவதும் அதற்குரிய சிகிச்சை பெற்று வந்ததாக மனைவி தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிக்கு லைசென்ஸ் இல்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.