சமூக வலைதளத்தில் பதிவேற்றி அட்டகாசம் | Blood drawing | Trichy
திருச்சி திருவானைக்காவல் மேம்பாலம் கீழே பெட் ஷாப் நடத்தி வருபவர் முகிலன். ஓவியரான இவர் ரத்த ஓவியம் வரைந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். தான் ரத்த ஓவியம் வரைவதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். இதற்காக ஸ்ரீரங்கம் தேவி தெரு பகுதியில் ஒரு ரத்த சேமிப்பு நிலையத்தில் ரத்தத்தை சேமிக்க கூடிய வேலையையும் இவருடைய ஊழியர்கள் இவரும் செய்து வருகின்றனர். இரண்டு எம்எல் ரத்தத்தை எடுத்து அதன் மூலம் ஓவியத்தில் பெயிண்ட் செய்து கொடுக்கிறார். இதற்காக 1500 முதல் 4000 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2022 ம் ஆண்டு சுகாதாரத்துறை ரத்த ஓவியம் வரைவதை தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் திருச்சி ஓவியர் அத்துமீறி ரத்த ஓவியம் வரைந்து விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.