13 மணி நேரம் 30 நிமிடங்களில் எழுதி சாதனை | Trichy | cbse school
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை சிபிஎஸ்இ பள்ளி முதல்வராக இருப்பவர் சித்ரா. உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு ஒன்றரை அடி அகலம் கொண்ட 1133 பனை ஓலையில் 1330 திருக்குறள்களை எழுதும் சாதனையை தொடங்கினார். காலை 9.03 மணிக்கு தொடங்கி தொடர்ந்து இரவு 10.33 மணிக்கு எழுதி முடித்து சாதனையை படைத்தார். இவரது சாதனையை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் அங்கீகாரம் வழங்கியது. இதற்கான சான்றிதழை கண்காணிப்பாளர் வெங்கடேசன் வழங்கினார். பள்ளி முதல்வரின் சாதனையை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்.
பிப் 06, 2024