உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 6 மாநிலங்களைச் சேர்ந்த 468 மாணவர்கள் பங்கேற்பு

6 மாநிலங்களைச் சேர்ந்த 468 மாணவர்கள் பங்கேற்பு

6 மாநிலங்களைச் சேர்ந்த 468 மாணவர்கள் பங்கேற்பு | Trichy | Mens Chess Tournament | 468 students from 6 states participate தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் செஸ் போட்டி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மார்ச் 2ம் தேதி தொடங்கி 5ம் தேதிவரை நடைபெறுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து 7 சுற்றுகள் கொண்ட போட்டியாக நடத்தப்படுகிறது. போட்டியில், 6 மாநிலங்களைச் சேர்ந்த 78 பல்கலைக்கழகங்களிலிருந்து 468 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். போட்டியில் 7சுற்றுகள் முடிந்து, 14 புள்ளிகளுடன் ஆந்திரப்பிரதேசம், குண்டூர் கோனேரு லட்சுமையா கல்வி அறக்கட்டளை முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 12 புள்ளிகளுடன் காட்டங்குளத்தூர் சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 2வது இடத்தையும், 11 புள்ளிகளுடன் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் 3வது இடத்தையும், கேரளா மாநிலம் கோட்டயம் மகாத்மாகாந்தி பல்கலைக்கழகம் அணி 4வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த பல்கலைக்கழக வீரர்கள் ஏப்ரலில் மணிபாலில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் விளையாடுவர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின் தலைமையில், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வாழ்த்தினார். துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணா, போட்டி செயலாளர் பால்ராஜ், ஒருங்கிணைப்பு செயலாளர் மகபூப் ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மார் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ