திருச்சி வயலுாரில் வெயிலால் வாழை விவசாயம் கடும் பாதிப்பு | Damage to banana farming | Trichy
திருச்சி மாவட்டத்தில் 32,000 ஏக்கரில் நேந்திரம், பூவன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் என பல்வேறு வாழை ரகங்கள் பயிரிட்டுள்ளனர். முன்கூட்டியே திட்டமிடல் இல்லாமல் ஜூன் மாதத்தில் தமிழக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. இதனால் வாழைப் பயிர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நீர் கிடைக்கவில்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் மோட்டார் மூலம் பாசனம் செய்ய முடியாமல் தண்ணீர் இன்றி வாழை தார்கள் போதிய திரட்சி இல்லாமல் மரங்களிலேயே பழுத்து காய்ந்து வருகிறது. வாழைத்தார்களை வியாபாரிகள் வாங்க மறுப்பதால் வாழைத்தார்களை அறுத்துக் கொண்டு சந்தைப்படுத்த அதிக கூலி செலவாகும் என்பதால் அதையும் அறுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். கடும் நஷ்டும் ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.