உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / கூட்டத்தை காட்ட அரசு பஸ்களில் மக்களை அழைத்து வந்த திமுகவினர்

கூட்டத்தை காட்ட அரசு பஸ்களில் மக்களை அழைத்து வந்த திமுகவினர்

கூட்டத்தை காட்ட அரசு பஸ்களில் மக்களை அழைத்து வந்த திமுகவினர் | Trichy | DMK conference causes traffic jam | Public struggled for 3 km திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் திமுகவின் 12 வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டு பணிகளில் அரசு இயந்திரங்கள் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கூட்டத்தை காட்ட பணம் கொடுத்து அரசு பஸ்கள், வாகனங்களில் மாநாட்டுக்கு பொதுமக்கள் அழைத்து வரப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தினர். மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றிவிட்டு பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். மாநாடு நிறைவடைந்த பின்னர், மாநாட்டிற்கு வாகனங்களில் வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். ஒரே நேரத்தில் அனைவரும் புறப்பட்டு சென்றதால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்கு நெரிசல் ஏற்பட்டது. 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

மார் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ