உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்

சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்

தமிழக அரசு சார்பில் பள்ளி, சத்துணவு கூடங்கள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு இலவச முட்டை வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் சத்துணவு கூட முட்டைகளை பயன்படுத்தி திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஓட்டல்களில் ஆம்லெட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. ஹோட்டல்களில் சத்துணவு கூட முட்டை பயன்படுத்தப்படுத்திய வீடியோ வெளியானது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சத்துணவு முட்டை பயன்படுத்திய ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். ஹோட்டல் உரிமையாளர் ரத்தினம், மதுராபுரி சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சத்துணவு கூட அமைப்பாளர் வசந்தகுமாரி 111 முட்டைகளை திருடி விட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். கைது செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளரும் சத்துணவு அமைப்பாளரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ