உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ஸ்ரீரங்கம் தொகுதி பார்வையற்ற மாற்று திறனாளிகள் வாழ்வின் அவலம்

ஸ்ரீரங்கம் தொகுதி பார்வையற்ற மாற்று திறனாளிகள் வாழ்வின் அவலம்

ஸ்ரீரங்கம் தொகுதி பார்வையற்ற மாற்று திறனாளிகள் வாழ்வின் அவலம் The Struggling Voices of Nagamangalam| Election Boycott திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியின் நாகமங்கலம் கிராமத்தில் பார்வைத்திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகள் வீடுகள் கட்டிக்கொள்ள தமிழக அரசு 1998ல் நிலம் ஒதுக்கியது. பின்னர் 2002ல் அரசே வீடுகளை கட்டித் தந்தது. தற்போது காந்தி நகர் என அழைக்கப்படும் இந்த பகுதியில் சுமார் 120 மாற்றுத் திறனாளிகள் வசிக்கின்றனர். இவர்கள் மெழுகுவர்த்தி, ஊதுப்பத்தி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். சிலர் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இங்கு பட்டப்படிப்பு முடித்த மாற்றுத் திறனாளிகள் இருந்தாலும் அரசு வேலையின்றி உள்ளனர். தமிழக அரசு இவர்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறது. இதை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டுமென அவர்கள் கோரி வருகின்றனர். குடியிருக்கும் காந்தி நகர் பகுதியிலும் போதிய அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். வீடுகளுக்கு அருகில் தொங்கும் மின்கம்பிகள், தரமற்ற சிமென்ட் சாலைகள், தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர் என இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். ஆட்சியாளர்களை அணுகி பல முறை பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டு மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை என கவலையுடன் கூறுகின்றனர் கண் பார்வைத்திறன் இல்லாத காந்திநகர்வாசிகள். Byte : மாரியப்பன் மாற்றுத்திறனாளி 0.01 - 2.28 2.40 - 3.35 Byte சந்திரசேகரன் மாற்றுத்திறனாளிகள் சங்க பொது செயலாளர் திருச்சி மாவட்டம் 3.36 - 5.41

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை