50க்கும் மேற்பட்ட பாஜவினர் கைது| entry restricted BJP protest and arrest| Srirangam
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்கு கட்டண பாஸ் வழங்கப்படும். 700 ரூபாய் கட்டண பாஸ் கிளி மண்டபம் செல்வதற்கும் 4000 ரூபாய் கட்டண பாஸ் அர்ஜுன மண்டபம் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. உபயதாரர்களில் பாஸ் வைத்திருப்போர் கருவூல மேடைக்கு அருகில் அழைத்துச் செல்லப்படுவர் பாஸ் வைத்திருப்போர் நள்ளிரவு 2 :15 மணி வரை உள்ளே அனுமதிக்கப்படுவர் என பாசில் குறிப்பிட்டபட்டிருந்தது. ஆனால் நள்ளிரவு ஒரு மணிக்கே போலீசார் அனுமதியை மறுத்தனர் சுமார் 3 மணி நேரம் கருட மண்டபத்திலேயே பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர் பாஸ் வைத்திருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர் சில பக்தர்கள் குடும்பத்துடன் வெளியேறினர் அளவுக்கு அதிகமான பாஸ் கொடுக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பக்தர்களை அனுமதிக்காமல் அறநிலயத்துறை மினிஸ்டர் சேகர்பாபு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது இதனை கண்டித்து ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுரம் முன் பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்