நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை
நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை | Farmers are suffering due to non procurement of Paddy | Trichy திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மாணிக்கம்பிள்ளை சத்திரம் பகுதியில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல்கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை கொண்டு வந்து விற்பனைக்காக கொட்டி வைத்துள்ளனர். ஆனால் இதுவரை விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யப்படவில்லை. அதற்கான நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேதனையடைந்த விவசாயிகள் நெல்கொள்முதல் செய்யக்கோரி அங்குள்ள நெல் இயந்திரத்திற்கு பாஜகவினர் மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இயந்திரம் பழுது ஏற்பட்டதால் தான் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. உடனே நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும என்று கூறியதை அடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.