உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / இலவச தையல் பயிற்சி சான்று வழங்கும் விழா

இலவச தையல் பயிற்சி சான்று வழங்கும் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொய்கைப்பட்டி ஊராட்சி ராயம்பட்டி பல்நோக்கு வளாகத்தில் GHCL பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் தொண்டு நிறுவனம் சார்பில் பெண் தொழில் முனைவோர்களுக்கு இலவச தையல் பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சி முடித்த பெண் தொழில் முனைவோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. பொய்கைப்பட்டி ஊராட்சி தலைவர் ரோசலின் சகாய மேரி ராஜ சேகர் தலைமை வகித்தார். பெட்கிராட் பொருளாளர் சாராள் ரூபி, பயிற்சியாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். சான்றிதழ்களை GHCL பவுண்டேஷன் CSR அதிகாரி சுஜின் மற்றும் GHCL டெக்ஸ்டைல்ஸ் யூனிட் ஹெட் சதீஷ்குமார் வழங்கினர். பெண் தொழில்முனைவோர்களிடம் கலந்துரையாடினர். பயிற்சிக்கு பின் பெண்கள் சுய தொழில் துவங்க, வங்கிக்கடன் பெற்றுத்தர, தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என பெட்கிராட் நிறுவனம் உறுதியளித்தது. பயிற்சியாளர்கள் சித்ராதேவி மற்றும் சத்யா நன்றி கூறினர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை