தண்ணீர் பாய்ச்ச முடியாததால் 370 ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு | Hurricane force winds | 15 power
தண்ணீர் பாய்ச்ச முடியாததால் 370 ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு | Hurricane force winds | 15 power poles were broken | Trichy திருச்சியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது, அதில் புங்கனூர், தாயனூர், கிராமங்களில் 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் வயல்களில் முறிந்து சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் 15 நாட்களாக மின்சாரம் இல்லாமல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அறுவடைக்கு தயாராக உள்ள 370 ஏக்கர் நெல் மற்றும் மக்காச்சோளம் கருகி வருகிறது. வீடுகள் மற்றும் சாலைகள் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி மக்கள் பரிதவித்து வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மின் கம்பம் ஒன்றை மாற்றம் செய்ய தலா 27 ஆயிரம் ரூபாய் கேட்பதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.