உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 46 பதக்கம் வென்று இந்திய அணி அபாரம்| international Karate competition| Trichy

46 பதக்கம் வென்று இந்திய அணி அபாரம்| international Karate competition| Trichy

46 பதக்கம் வென்று இந்திய அணி அபாரம்/ international Karate competition/ Trichy இலங்கை அனுராதாபுரத்தில் உலக கராத்தே போட்டி பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்தியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இந்திய அணியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் 25 வீரர்கள் கலந்து கொண்டனர். கட்டா, குமித்தே, டீம் கட்டா உள்ளிட்ட பிரிவுகளில் இந்திய அணி 17 தங்கம், 16 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கம் வென்றது. உலக கராத்தே சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா இரண்டாம் இடம் பெற்று அசத்தியது. ஏற்பாடுகளை சர்வதேச ஷோட்டோகான் கராத்தே ஃபெடரேஷன் குழுவினர் செய்தனர். வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச ஷோட்டோகான் கராத்தே பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு சார்பில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி