/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ ஏப்ரல் 8 ம் தேதி காலை 8 மணிக்கு பங்குனி தேரோட்டம் |Trichy | Jambukeswarar temple
ஏப்ரல் 8 ம் தேதி காலை 8 மணிக்கு பங்குனி தேரோட்டம் |Trichy | Jambukeswarar temple
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் 48 நாட்கள் நடைபெறும் மண்டல பிரமோற்சவ கோடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சந்திரசேகரர் மற்றும் அம்பாள் பல்லக்கில் புறப்பாடு நடைபெற்று 3 ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் முன்னிலையில் எட்டுத்திக்கும் உள்ள கொடி மரங்கள் மற்றும் கொடிபடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து எட்டுத்திக்கும் கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 8 ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும்.
ஏப் 03, 2024