உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / மாநகர போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை | Trichy | Liquor bottle thrown at Dindigul Leoni

மாநகர போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை | Trichy | Liquor bottle thrown at Dindigul Leoni

மாநகர போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை | Trichy | Liquor bottle thrown at Dindigul Leoni திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இனிகோ இருதயராஜை எதிர்த்து தவெக தலைவர் விஜய், அதிமுக சார்பில் ராஜசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று இனிகோ இருதயராஜை ஆதரித்து திருச்சி கிழக்கு தொகுதி கீழப்புதூர் அரசமரத்தடி பகுதியில் திமுக பட்டிமன்ற பேச்சாளர் ஐ.லியோனி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் மீது காலி மதுபாட்டில் வீசப்பட்டது. இதில் லியோனி காயமின்றி தப்பினார். பாட்டில் வீச்சு சம்பவம் குறித்து திருச்சி மாநகர போலீசார் அந்த பகுதி சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை