உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / சுதந்திர தினத்தில் மனம் திருந்திய தந்தையர் கவுரவிப்பு

சுதந்திர தினத்தில் மனம் திருந்திய தந்தையர் கவுரவிப்பு

சுதந்திர தினத்தில் மனம் திருந்திய தந்தையர் கவுரவிப்பு | Letters written by children | Parents who gave up drugs | Trichy திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆசிரியரிகளின் வழிகாட்டுதலில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு கடிதம் எழுதினர். கடிதங்களை போஸ்ட் ஆபீஸ் மூலம் யார் யாருக்கு கடிதம் எழுதி இருந்தார்களோ அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களின் தந்தையிடம் இருக்கும் போதை பழக்கம் குறித்து சுட்டிக்காட்டி தினமும் செத்து செத்து பிழைப்பதாகவும், மன வேதனையடைந்து வருவதாகவும் குமுறியிருந்தனர். குழந்தைகள் எழுதிய கடிதங்களை பார்த்து மது பழக்கம் உள்ள தந்தைகள் மனம் வெதும்பினர். தனது போதையால் குழந்தைகள் எந்தளவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்து மன வேதனையடைந்தனர். இனிமேல் குடிக்க மாட்டேன். புகைக்க மாட்டேன் என குழந்தைகளிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட்ட தந்தைகளை சுதந்திர தின விழாவில் கவுரவிக்க பள்ளி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மனம் திருந்திய 15 தந்தைகள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று வரவேற்றனர். பறை இசை முழங்க தந்தைகளை பிள்ளைகள் மேடைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர். பள்ளி தந்தையர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பள்ளி சார்பில் தயாரிக்கப்பட்ட தந்தையின் உறுதிமொழி என்ற சான்றிதழில் பெற்றோர்கள் கையெழுத்திட்டு தங்களது குழந்தைகளுக்கு கொடுத்தனர். இதை மாணவர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். மனம் மாறிய தங்களின் தந்தைக்கு மகிழ்ச்சி தெரிவித்து குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதற்கு நன்றி தெரிவித்தனர்.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !