உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது | Trichy | Mahakala Bhairava Nathaswamy Temple

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது | Trichy | Mahakala Bhairava Nathaswamy Temple

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது | Trichy | Mahakala Bhairava Nathaswamy Temple Kumbabhishekam திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குண்டூர் மல்லிகை நகரில் பைரவருக்காக தனி கோயிலாக ஸ்ரீ மகா கால பைரவ நாத சுவாமி கோயில் கட்டப்பட்டது கடந்த 15 ம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கணபதி பூஜையுடன் முதலாம் கால யாக பூஜை தொடங்கியது. காலை நான்காம் கால யாக பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது. மூலவரின் விமான கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர் ஸ்ரீ மஹா கால பைரவ நாத சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களான மகா கணபதி, ஸ்ரீ வள்ளி தேவசேனாதிபதி, ஸ்ரீ வராகி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜூன் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி