உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 3500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | Manavai Marathon| World Heart Day| Trichy

3500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | Manavai Marathon| World Heart Day| Trichy

திருச்சி மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மணவை மாரத்தான் என்ற தலைப்பில் மாநில அளவிலான மாரத்தான் போற்றி நடைபெற்றது 21 கிலோ மீட்டர் முதல் 100 மீட்டர் வரை 6 பிரிவுகளாக இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 கிலோமீட்டர் பிரிவில் தனியாக பிரத்யேக போட்டி நடந்தது வீல் சேரில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் உற்சாகமாக போட்டியில் கலந்து கொண்டனர். பல மாவட்டங்களைச் சேர்ந்த 3500 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். சாலையின் இருபுறமும் பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரத்துடன் வீரர்களை ஊக்குவித்தனர் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வேலூரை சேர்ந்த வேலுச்சாமி முதலிடம் பெற்றார் 21 கிலோ மீட்டர் பிரிவில் கோவையை சேர்ந்த சதீஷ்குமார், 10 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் கோவையை சேர்ந்த யோகேஸ்வரன், பெண்கள் பிரிவில் திருச்சியை சேர்ந்த சதா முதலிடம் பிடித்து அசத்தினர்.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ