சிவகங்கை குளத்தில் அஸ்திரதேவருக்கு மூன்று முறை தீர்த்தவாரி
சிவகங்கை குளத்தில் அஸ்திரதேவருக்கு மூன்று முறை தீர்த்தவாரி/ Masi Magam Theerthavaari/Naganaadha swamy temple/ Trichy திருச்சி மலைக்கோட்டை ஆனந்தவல்லி சமேத நாகநாதசுவாமி கோயிலில் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. நாக லோகத்தில் உள்ள முள் செவ்வந்தி மலரை வைத்து 7 நாக கன்னியர் சிவனை இத்தலத்தில் பூஜித்தனர் என்பது ஐதீகம். கோயிலின் மாசி மகம் திருவிழா மார்ச் மாதம் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று சிவகங்கை குளத்தில் நடைபெற்றது. உற்சவர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். சிவகங்கை தெப்பக்குளத்தில் அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவியம், பால், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் அஸ்திரதேவருடன் மூன்று முறை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருளினர். மகாதீபாரதனை காட்டப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் மாசிமாக தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.