இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை | ISRO Mayilsamy Annadurai
திருச்சி என் ஐ டி கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி கருத்தரங்கு நடைபெற்றது. இதை இஸ்ரோ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு அறிவியல் தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தில் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழிகாட்டியாகவும் இந்தியா உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில் நிலவில் நீர் இருப்பதை முதல் முதலில் இந்தியா தான் கண்டுபிடித்தது. அதுதான் மற்ற நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது. உலக அளவில் திருப்பி பார்க்க கூடிய இடமாக குலசேகரபட்டினம் மாற்றப்பட்டு வருகிறது. இங்கிருந்து குறைந்த செலவில் குறைவான எரிபொருள் மூலம் விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் அனுப்ப முடியும். குலசேகரபட்டினம் மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் ஏவு தளத்திற்கு தேவையான ஏவுகலன்கள், எரிபொருள், உதிரி பாகங்கள் தயாரிப்பு, சிறிய செயற்கோள்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. இதன் பயனால் மிகக் குறைந்த செலவில் விண்வெளிக்கு செயற்கைகோள்கள் அனுப்புவதற்கு சிறந்த இடமாக குலசேகரப்பட்டினம் இன்னும் 3 ஆண்டுகளில் உலகையே திரும்பி பார்க்க வைப்பது உறுதி என்றார்.