வெற்றி வீராங்கனைகளுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் தடபுடல் வரவேற்பு
வெற்றி வீராங்கனைகளுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் தடபுடல் வரவேற்பு / national level karate competion / welcome to the winning players / Trichy தேசிய அளவிலான 4 வது கராத்தே போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 30 க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். 11 வயதுக்கு உட்பட்டோருக்கான குமித்தே பிரிவில், 45 கிலோவிற்கு மேற்பட்ட எடை பிரிவில் திருச்சி உளவுத்துறை போலீசார் தனசேகரன் மகள் தனன்யஸ்ரீ வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் ஏற்கனவே நடந்த மாநில கராத்தே போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 12 வயதிற்கு உட்பட்ட 45 கிலோ எடைபிரிவில் பெல்நிறுவன பணியாளர் ஹரிபாலன் மகள் சுபந்தனா வெண்கலம் வென்றனர். திருச்சி ஏர்போர்ட்டில் வந்த வெற்றி வீராங்கனைகளுக்கு குடும்பத்தினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தடபுடல் வரவேற்பு அளித்தனர்.