தமிழக அணி வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் பயிற்சி | National Softball Tournament
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான தேசிய சாஃப்ட் பால் போட்டி பிப்ரவரி 3 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை சட்டீஸ்கர் மாநிலத்தில் நடக்கிறது. மென்பந்து எனும் சாஃப்ட் பால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான சிறப்பு பயிற்சி முகாம் திருச்சி S.B.I.O.A.பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தமிழக அணிக்கான தலா 16 பேர் அடங்கிய வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியாளர் சரவணகுமார், அணி மேலாளர் சரவணன் தலைமையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் பிப்ரவரி 3 முதல் 6 வரை சட்டீஸ்கர் மாநிலத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் 67வது தேசிய சாஃப்ட் பால் போட்டியில் தமிழக அணி சார்பாக பங்கேற்பர்.